Showing posts with label கவிதை. Show all posts
மனதை சூட்ட வார்த்தை
காதல் ஒன்றும் கெட்ட வார்த்தை அல்ல..
நம் மனதை தொட்ட வார்த்தை..
அது பெற்றோர்களை மனதை சூட்ட வார்த்தை.....
நம் மனதை தொட்ட வார்த்தை..
அது பெற்றோர்களை மனதை சூட்ட வார்த்தை.....
Tags:
கவிதை
தோல்வியைக்கண்டு கலங்க வேண்டாம்
தோல்வியைக்கண்டு கலங்கும்
குணம் வேண்டாம்
வெற்றியை மதிப்பிடும்
சுய அறிவு வேண்டும்
வாழ்க்கை என்னும்
கடலைக் கடக்க
கருணை வேண்டாம்
தன்னம்பிக்கை என்னும்
துடுப்பிருந்தால் போதும்.
Tags:
கவிதை
கனவுகளை காப்பாற்ற
கனவுகளே காணத் தெரியாமல்
இருந்த காலமுமுண்டு.
ஆசை துகள்களாக ஆரம்பித்து
கனவுகளாக உருவெடுத்தது.
கனவுகள் காலப் போக்கில்
லட்சியங்களாக மாறிக்கொண்டது.
வாழ்க்கைப் பாதையில் சேர்ந்தபின்
லட்சியங்கள் வடிவம் பூசப்பட்டது.
.
.
.
பல இன்பங்களை விட்டுக்கொடுத்து
எண்ணங்களை மாற்றியமைத்து
உடலை காயப்படுத்தி
உணர்வுகளை ஒருமுகப்படுத்தி
சொந்தங்களை தூரதள்ளி
நம்பிக்கையை தன்வசப்படுத்தி
என் சிந்தனைக்கு மட்டும் மதிப்பளித்து
வளர்ந்த பாதைக்கு முற்றுப்புள்ளியிட்டு
.
.
.
மீண்டும் விதையாகி, வேருன்றி,
கிளையிடத் துவங்கிவிட்டேன்...
Tags:
கவிதை
நட்பா? காதலா?
நட்பா? காதலா?
நட்பு பெரிதா ? காதல் பெரிதா ?
நண்பன் கேட்டான்
நான் முதலில் கற்றுக் கொண்டது
நட்பு தான்
நான் இது வரையில் காத்து வருவது
நட்பு தான்
என்னை நானாக பார்த்தது
நட்பு தான்
காதலின் இனிமையான பாகம்
நட்பு தான்
எனினும்
எனக்கு என்னை அறிமுகப்படுத்தியது
காதல் தான்
எனவே,
நட்பின் காதலும்,
காதலின் நட்பும்.
Tags:
கவிதை
ஆழம் அளந்திடு
இங்கே.....
களிமண்ணுக்கில்லை மதிப்பு
தங்கத்துக்கு தானுண்டு.
கிடைக்காத பொருள்களின் மீதே
மோகம் ஏற்படுத்திக் கொண்டதாலோ என்னவோ
முழுமையாக கிடைக்குமென்றான அன்பின்மேல்
மோகம் அதிகரிப்பதில்லை.
Tags:
கவிதை