ஒரே மொபைலில் இரண்டு 'சிம்கார்டு'களை பயன்படுத்தும்
நோக்கியாவின் புதிய மொபைல் போன்('சி100'), சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

நோக்கியா போன் வாடிக்கையாளர்களின் நீண்ட நாள் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ஒரே மொபைலில் இரண்டு 'சிம்கார்டு' களை பயன்படுத்தும் புதிய மொபைல் போனை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.
இதில் நோக்கியா 'சி100' என்ற புதிய மொபைல் போனை, விற்பனை இயக்குனர் விபுல் சபர்வால் அறிமுகப்படுத்தினார். அப்போது அவர் பேசுகையில், நோக்கியா வாடிக்கையாளர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், புதிய 'சி100' என்ற புதிய போனை நோக்கியா அறிமுகப்படுத்தி உள்ளது.
ஒரே போனில் இரண்டு சிம்களை பயன்படுத்தும் முறையில் தயாரிக்கப்பட்ட இந்தப் புதிய போன் 1,999 ரூபாயில் கடைகளில் விற்பனை செய்யப்படும். வாடிக்கையாளர்களுக்கு கட்டுபடியாகும் விலையில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய போன், மூன்று கலர்களில் விற்பனைக்கு வந்துள்ளது.
புதிய போனில் எந்த அழைப்பு வந்தாலும், ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம் இரண்டு சிம்கார்டிலும் மாறி மாறி பேசும் வகையில், சிறப்பு வசதிகளைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.'பிளாஷ் லைட், எப்.எம், ஹெட்போன் ஜாக்' உள்ளிட்ட பல சிறப்பம்சங்களும் இதில் உண்டு, என விபுல் சபர்வால் குறிப்பிட்டார்