Home � � சில குறிப்பிட்ட மொபைல் வைரஸ்கள்...!

சில குறிப்பிட்ட மொபைல் வைரஸ்கள்...!

1. Cabir – ஜூன் 2004. சிம்பியன் 60 சிஸ்டத்தில் பரவும்6 வகையில் தயாரிக்கப்பட்டது. புளுடூத் வழி பரவியது. சேதம் விளைவிக்கவில்லை. மேலும் தகவல்களுக்கு http://www.fsecure. com/vdescs/cabir.shtml



2. Skulls – நவம்பர் 2004. பல சிம்பியன் சிஸ்டங்களில் பரவும் வகையில் தயாரிக்கப்பட்டது.6-1 இன்டர்நெட் டவுண்லோட் வழி பரவியது. அழைப்பு அனுப்புதல் மற்றும் பெறுதல் தவிர, பிற அனைத்து வசதிகளையும் தான் சென்றடைந்த மொபைல் போனில் முடக்கியது. மேலும் தகவல்களுக்கு http://www.fsecure.com/vdescs/skulls.shtml


3.Comm warrior – ஜனவரி 2005. சிம்பியன் 60 சிஸ்டங்களில் பரவும் வகையில்6-2 தயாரிக்கப்பட்டது. புளுடூத் மற்றும் எம்.எம்.எஸ். வழி பரவியது. அட்ரஸ் புக்கில் உள்ள அனைத்து முகவரிகளுக்கும் பெரிய அளவில் எம்.எம்.எஸ். செய்திகளை அனுப்பி போன் கட்டணத்தை அதிகமாக்கியது. மேலும் தகவல்களுக்கு http://www.fsecure.com/vdescs/commwarrior. shtml

4. Locknut. – மார்ச் 2005. சிம்பியன் 60 சிஸ்டங்களில் பரவும் வகையில் தயாரிக்கப்பட்டது.6-3 சிம்பியன் 60 சிஸ்டங்களுக்கான பேட்ச் பைல் போல தயாரிக்கப்பட்டது. இன்டர்நெட் டவுண்லோட் வழி பரவியது. போனில் உள்ள சிஸ்டம் பைல்களை சிதைக்கும் வேலையை இது மேற்கொள்ளும். மேலும் மற்ற மால்வேர் ரோகிராம்களையும் பதிந்து வைக்கும். மேலும் தகவல்களுக்கு http://www.fsecure. com/vdescs/locknut_b.shtml
5. Fontal – ஏப்ரல் 2005. சிம்பியன் 60 சிஸ்டங்களில் பரவும் வகையில் தயாரிக்கப்பட்டது.6-4 இன்டர்நெட் டவுண்லோட் வழி பரவியது. போன் தொடங்கும்போது இயங்கும் சிஸ்டம் பைல்களை முடக்கும். போனை முழுவதுமாக சிதைக்கும் வேலையை மேற்கொள்ளும். மேலும் தகவல்களுக்கு http://www.fsecure.com/vdescs/fontal_a.shtml

Tags: